இந்தியா

'நூடுல்ஸ்' சாப்பிட்டு கொண்டு வான்சாகசம் செய்த வாலிபர்- வீடியோ

Published On 2025-01-10 14:04 IST   |   Update On 2025-01-10 14:04:00 IST
  • எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
  • ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.

வான்சாகசம், கடல் சாகசம் போன்ற சாகச விளையாட்டுகளை விரும்பும் வாலிபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான வான் சாகசத்தை விரும்பிய ஒருவர் 'ஸ்கை டைவிங்' சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக 'ஸ்கை டைவிங்' செய்யும் பெரும்பாலானோர் கண்களை மூடி கொள்வது, தனது பாதுகாவலரை இறுக்கி பிடித்து கொள்வது போன்ற செயல்களை செய்வார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் 'ஸ்கை டைவிங்' செய்யும் வாலிபர் உயரத்தில் இருந்து குதிப்பது குறித்து எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக 'நூடுல்ஸ்' சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், 'ஸ்கை டைவிங்' செய்வதே சுவாரஸ்யமான ஒரு விஷயம். இந்த வாலிபர் அதை மேலும் சுவாரஸ்யமாக்கி விட்டார் என பதிவிட்டனர். ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.



Tags:    

Similar News