இந்தியா

7 மணி நேர பயணம் வீண்.. U Turn அடித்து மீண்டும் டெல்லிக்கே திரும்பிய Indigo விமானம் - ஏன்?

Published On 2026-03-10 00:21 IST   |   Update On 2026-03-10 00:22:00 IST
  • ஆப்பிரிக்கா வழியாக நீண்ட தூர பாதையிலேயே சென்று கொண்டிருந்தது.
  • எத்தியோப்பியா - எரித்திரியா எல்லையில் நுழைந்தது.

டெல்லியில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் 7 மணி நேர பயணத்தின் பின் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது.

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, ஏற்கனவே இந்த விமானம் மோதல் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக ஆப்பிரிக்கா வழியாக நீண்ட தூர பாதையிலேயே சென்று கொண்டிருந்தது.

விமானம் எத்தியோப்பியா - எரித்திரியா எல்லை வான்வெளியில் நுழைந்தபோது, அங்கு திடீரென வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் மான்செஸ்டர் செல்வது சாத்தியமில்லை என்பதால், விமானம் 'யு-டர்ன்' எடுத்து மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது.

பயணிகளின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதலிடம் அளிக்கிறோம் என்று இது குறித்து இண்டிகோ அறிக்கை வெளியிட்டுள்ளது.   

Tags:    

Similar News