இந்தியா

நேபாள தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி - போனில் அழைத்து வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி #nepal

Published On 2026-03-10 03:11 IST   |   Update On 2026-03-10 03:11:00 IST
  • 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றிபெற்றுள்ளது.
  • பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன்.

நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.

பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்டுவர்.

165 இடங்களில், 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றிபெற்றுள்ளது.அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் (RSP) தலைவர் திரு. ரபி லாமிச்சானே மற்றும் RSP இன் மூத்த தலைவர் திரு. பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன்.  

நேபாளத் தேர்தல்களில் RSP-யின் மகத்தான வெற்றிக்காக இரு தலைவர்களையும் வாழ்த்தினேன். அவர்களின் வரவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கும், நமது இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

நமது கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் நேபாள உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Similar News