இந்தியா

'சீதா' சிங்கத்தை 'அக்பர்' சிங்கத்துடன் ஒரே இடத்தில் அடைக்கக்கூடாது: VHP எதிர்ப்பு

Published On 2024-02-17 10:32 GMT   |   Update On 2024-02-17 10:32 GMT
  • திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
  • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சிலிகுரி உயிரியல் பூங்காவில் 'சீதா' என்ற பெண் சிங்கம் மற்றும் 'அக்பர்' என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு வருகின்ற 20 தேதி விசாரணைக்கு வருகிறது. 

Tags:    

Similar News