இந்தியா

சாகர் அதானியின் செல்போனில் லஞ்ச கணக்கு விவரங்கள் உள்ளதாக தகவல்

Published On 2024-11-22 10:58 IST   |   Update On 2024-11-22 10:58:00 IST
  • லஞ்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட்டது.
  • சாகரிடம் இருந்த மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி:

அதானியின் உறவினரான சாகர் அதானியின் செல்போனில் அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2022-ம் ஆண்டு கவுதம் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா மற்றும் பலர் டெல்லியில் சந்தித்து லஞ்சம் பற்றி விவாதித்துள்ளனர்.

அப்போது தனது செல்போனில் நிறுவனம் வாரியாக செலுத்த வேண்டிய தொகையைக் காட்டும் ஆவணத்தை படம் எடுத்தார்.

அதில் 650 மெகாவாட் ஒப்பந்தங்களுக்கு ரூ.55 கோடியும், 2.3 ஜிகாவாட் பிபிஏ-க்கு ரூ.583 கோடியும். மெகாவாட் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உள்ளன.

ஒப்பந்தங்கள் தொடர்பாக குப்தா மற்றும் சாகர் அதானி இடையே நவம்பர் 24, 2020 தேதியிட்ட மின்னணு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ரூபேஷ் அகர்வால், பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் உதவியுடன் லஞ்சம் பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக தயார் செய்துள்ளனர். லஞ்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்பதும் அதில் எழுதப்பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

2023-ம் ஆண்டு, எப்.பி.ஐ சிறப்பு முகவர்கள் அமெரிக்காவில் சாகர் அதானியை சந்தித்தனர். சாகரிடம் இருந்த மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மேலும் முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News