இந்தியா

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்தால் போர் பதற்றம் எப்படி குறையும்? - உமர் அப்துல்லா கேள்வி

Published On 2025-05-10 08:58 IST   |   Update On 2025-05-10 08:58:00 IST
  • இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.
  • அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவக்கூடாது.

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி அளிக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானிற்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச நாடுகள், சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்தால் போர் பதற்றம் எப்படி குறையும்? இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியாவின் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவக்கூடாது என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News