இந்தியா
அயோத்தியில் சாலையோர வியாபாரிகளை தோப்புக்கரணம் போடவைத்த அதிகாரிகள்
- அயோத்தியில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தண்டனை கொடுத்தனர்.
- தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் சுவரில் தலைகீழாக நிற்க வைத்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.