இரவு நேரத்தில் அயோத்தி ராமர் கோவில்: படங்கள் வெளியீடு
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட இருக்கிறது. மேலும் கோவிலில் பல சிலைகள் நிறுவப்பட இருக்கிறது. கோவில் வளாகங்களில், சுவர்கள் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமர் கோவில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் படத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
ராமர் கோவில் தொடர்பான அனைத்து அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள் மூலம் பிரபலங்களுக்கு நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில தலைவர்கள் அயோத்தில் செல்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பல தலைவர்கள் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளனர்.