இந்தியா

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் 

அக்னிபாத் திட்டம்- நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் 11ந் தேதி விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத்சிங்

Published On 2022-07-07 18:12 GMT   |   Update On 2022-07-07 18:12 GMT
  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
  • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News