இந்தியா

'போர்வை'களை மாதம் ஒருமுறையாவது துவைப்போம்.. ரெயில்வே அமைச்சர்

Published On 2024-11-28 15:09 IST   |   Update On 2024-11-28 15:09:00 IST
  • ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்படும்.
  • போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும்தான் துவைக்கப்படுமா என காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.

ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா, "ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?" என மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படும். பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் கம்பளியும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரெயில்வே துறைக்கு ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தது.

அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

Tags:    

Similar News