இந்தியா

ராகுல் காந்தி

ஆதிவாசிகள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை - ராகுல் காந்தி தாக்கு

Published On 2022-11-22 02:10 IST   |   Update On 2022-11-22 02:10:00 IST
  • ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று வந்தடைந்தது.
  • ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றை தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கியது என்றார்.

அகமதாபாத்:

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று வந்தடைந்தது. அப்போது கூட்டத்தினரிடம் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள் அனுபவித்து வரும் வலியை நான் உணர்ந்தேன். இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பா.ஜ.க.வோ வனவாசிகள் என அழைக்கிறது. அவர்களிடம் இருந்து, நிலங்களைப் பறித்து அவற்றை 2 முதல் 3 தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கி உள்ளது. ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பதற்கோ, அவர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை.

பழங்குடியினர் நலனுக்காக, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News