இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கை திசைதிருப்பவே தேர்தல் ஆணையம் மீதான கேள்விகள்: ராகுலை சாடிய பா.ஜ.க.

Published On 2025-04-22 15:51 IST   |   Update On 2025-04-22 15:51:00 IST
  • காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
  • இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமை யங் இந்தியன்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது. ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் பீதியில் இருப்பதைக் காட்டுகிறது.

தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்துதல் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பதையும், அவர்கள் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை நிறுவனங்களைத் தாக்கும் வகையில் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.

தேர்தல் ஆணையம் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். தேர்தல்களில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதுபோன்ற பல தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தையை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News