இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த நபர் கைது
- பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் நடமாட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானில் உளவு அமைப்புக்கு பகிர்ந்தாக பஞ்சாபை சேர்ந்த ககன்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் அவர் தகவல்களை பகிர்ந்து கொண்ட மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி பணம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.