இந்தியா
VIDEO: மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் - காரணம் தான் ஹைலைட்!
- இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.