இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ஒத்திவைப்பு

Published On 2025-05-07 12:11 IST   |   Update On 2025-05-07 12:11:00 IST
  • இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
  • அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரோஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வருகிற 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரையிலான பிரதமர் மோடியின் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News