இந்தியா

பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர்- காங்கிரஸ் முதல் மந்திரி பேச்சு

Published On 2024-03-05 04:13 GMT   |   Update On 2024-03-05 04:13 GMT
  • குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.
  • காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வரவேற்றார்.

"எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஏழைகளின் மேம்பாடு, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடு.

பிரதமர் மோடி தெலுங்கானாவின் மூத்த சகோதரர். அவரது உதவியால் மட்டுமே முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

தெலுங்கானா முன்னேற வேண்டுமானால் குஜராத் மாதிரியை பின்பற்ற வேண்டும். குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.

"காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் லட்சிய இலக்குக்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாநிலத்தின் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தெலுங்கானா முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி வகித்தபோது மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ் முதல் மந்திரியான ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். மேலும் அவரை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைபடுத்தி உள்ளது.

தெலுங்கானா தேர்தலுக்கு முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருந்து வந்த ரேவந்த் ரெட்டிக்கு அந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News