இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் ரூ.540 சம்பளம்.. மாதத்திற்கு 2 முறை சிக்கன், மட்டன்!

Published On 2025-08-04 23:40 IST   |   Update On 2025-08-04 23:40:00 IST
  • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.
  • எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்று வந்தார்.

பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.

சிறை விதிகளின்படி, அவருக்கு மாதம் ரூ. 540 சம்பளம் பெற அனுமதிக்கப்படுகிறது. அதுவும் சிறை அதிகாரிகள் அவருக்கு ஏதாவது வேலை ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்ற அவர் ஒரு சாதாரண கைதியாக தனது நாட்களை கழிக்கிறார்.

சிறையில் அவரது அன்றாட வேலைகள் ஒவ்வொரு நாளும் காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. காலை உணவை முடித்த பிறகு, அவர் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும்.

சிறை விதிகளின்படி, ஆரம்பத்தில் அவருக்கு பேக்கரி உதவியாளர் அல்லது எளிய தையல் போன்ற வேலை ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு வருடம் இந்த வேலைகளைச் செய்த பிறகு, அவரது தகுதிகளைப் பொறுத்து நெசவு அல்லது கொல்லர் போன்ற வேலைகளுக்கு மாற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை உணவு வெவ்வேறு வகையான டிஃபினுடன் வழங்கப்படுகிறது. காலை 11:30 மணி முதல் மதியம் 12 மணி வரை மதிய உணவு இடைவேளை உள்ளது. மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, ராகி முத்தா, சாம்பார், சாதம் மற்றும் மோர் ஆகியவை அடங்கும்.

வாரத்தின் செவ்வாய்க்கிழமை முட்டை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழிக்கறி வழங்கப்படும்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாரத்திற்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.   

Tags:    

Similar News