மணிப்பூர், டிரம்ப் உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடலாமா?: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
- வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை பிரதமர் ஏன் பார்வையிடவில்லை.
- நாட்டை உலுக்கும் 4 முக்கிய பிரச்சனையில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்வது ஏன் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டையே உலுக்கும் முக்கியமான நான்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் இரட்டை இயந்திரம் தடம் புரண்டடுள்ளது. மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் மணிப்பூருக்குச் செல்லவில்லை.
பிரதமரின் முடிவுகளால் ஆபரேஷன் சிந்தூரின் முதல் இரு நாட்களில் இந்தியா பின்னடைவை சந்தித்ததாக பாதுகாப்பு அதிகாரிகளின் வெளிப்படுத்தி உள்ளனர். அதிலிருந்தும் பிரதமர் மோடி தப்பி ஓடுகிறார்.
வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதை பிரதமர் மறந்து ஓடுகிறார்.
70 நாளுக்குப் பிறகும் பஹல்காம் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவதில் தொடர்ந்து தோல்வி அடைந்ததிலிருந்து பிரதமர் தப்பி ஓடுகிறார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை பிரதமர் ஏன் பார்வையிடவில்லை என காங்கிரஸ் தொடர்ந்து கேட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.