அயோத்தியில் அதிநவீன புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
- பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
லக்னோ:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுயில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் கொண்ட உத்தரபிர தேசத்தின் உள்கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி வியக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி மாற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதி ஏற்கனவே சொர்க்கலோகம் போல் மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைக்கப்பட்டது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார்.
மேலும், கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரெயில்கள், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் ரெயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.