இந்தியா

பிரதமர் மோடி

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-12-31 16:48 GMT   |   Update On 2022-12-31 16:48 GMT
  • போப் ஆண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.
  • முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

புதுடெல்லி:

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன் போப் ஆண்டவராக 16-ம் பெனடிக்ட் (95), இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என வாடிகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருச்சபைக்காகவும் ஏசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் முன்னாள் போப் 16-ம் பெனடிக். சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News