இந்தியா

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய 10,090 பேர்

Published On 2025-04-25 06:25 IST   |   Update On 2025-04-25 06:30:00 IST
  • மாநிலத்துக்குள் புதிதாக 4,107 பேர் வருகை புரிந்தனர்.
  • விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கோடை கால வாசஸ்தலமான ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் தங்கள் திட்டங்களை ரத்து செய்து சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறியுள்ளனர். மாநிலத்துக்குள் புதிதாக  4,107 பேர் வருகை புரிந்தனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல முண்டியடிக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது. 

Tags:    

Similar News