இந்தியா

பிரிந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட உமர் அப்துல்லா மனு தள்ளுபடி

Published On 2023-12-12 07:11 GMT   |   Update On 2023-12-12 07:11 GMT
  • உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
  • பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான அவர் பிரிந்து சென்ற தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

உமர் அப்துல்லாவின் இந்த மனுவை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி விசாரணை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. திருமண முறிவை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி கோர்ட்டு அவரது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

டெல்லி ஐகோர்ட்டு இன்று உமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய் தது. கீழ் கோர்ட்டு வழங்கிய உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Tags:    

Similar News