இந்தியா

கொரோனாவுக்குப் பிறகு ரெயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2025-06-27 14:50 IST   |   Update On 2025-06-27 14:50:00 IST
  • புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
  • 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர்.

இந்தியாவில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடந்த 2014-15 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டு முதல் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

அதே சமயம் கொரோனாவுக்குப் பிறகு இந்திய ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளின் முன்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

மத்திய தர வர்க்கத்தினரின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளதால் ரெயில்களில் முன்பதிவு செய்து அதிக அளவில் பயணிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ ரெயில்வே தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கு இடையில் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டுகளில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக புறநகர் பகுதிகளில், தொடர்ச்சியாக 2020 ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 2194 மில்லியன், 2022-23ம் ஆண்டில் 3,834 மில்லியன், 2023-24ல் 4,026 மில்லியன் மற்றும் 2024-25ம் ஆண்டில் 4,201 மில்லியன் என தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

அதே நேரம் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2019-2020ம் ஆண்டு வரையில் இது அதிகரிகரித்தே இருந்தது. 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு சட்டென புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை 76 மில்லியனாக குறைந்தது.

இந்த எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக 2021-22ல் 582 மில்லியனாகவும், 2022-23ல் 1,826 மில்லியனாகவும், 2023-24-ல் 2,150 மில்லியனாகவும், 2024-25ல் 2,360 மில்லியனாகவும் மீண்டும் அதிகரித்தது.

2014-15 மற்றும் 2019-20ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் டிக்கெட் விற்பனை ஊக்கமளிப்பதாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் மட்டும் புறநகர் பகுதியிலிருந்து 925 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,214 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ரெயில்வே தரவுகளில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News