இந்தியா

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டரில் பத்திரமாக மீட்ட ராணுவம்

Published On 2025-06-04 14:52 IST   |   Update On 2025-06-04 14:52:00 IST
  • சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
  • லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.

காங்டோக்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள் மூடப்பட்டன.

இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்டோரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News