சலுகைகள் மூலம் வாக்குகளை வாங்க முயற்சிக்கும் என்டிஏ-வுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்- பிரியங்கா காந்தி
- மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது.
- மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் சுயத்தொழில் தொடங்க, 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் நிதிஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பிரியங்கா காந்தி நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் உண்மையான நோக்கங்களை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாடம் கற்பிக்க அவர்கள் தகுதியானவர்கள்.
தேர்தல் வர இருப்பதால், 10 ஆயிரம் தர அரசு முன்வந்துள்ளது. ஆனால், இந்த 10 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளிக்கவில்லை.
மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது. மக்கள் அவர்களுடைய மகள்களுக்கு வரன் தேடுமபோது, அதை பயன்படுத்துகிறார்கள். அதேபோல், மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.