இந்தியா

மும்பை: கூட்ட நெரிசலால் புறநகர் ரெயிலில் இருந்து கீழே விழுந்து 5 பேர் உயிரிழப்பு

Published On 2025-06-09 11:11 IST   |   Update On 2025-06-09 12:26:00 IST
  • ரெயிலில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
  • இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் அதி மானோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். புறநகர் ரெயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கிறார்கள். இங்கு காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இன்று காலை தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டி ருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக அந்த ரெயில் படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் கதவுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்த போது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.

படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியி லேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மும்பை ரெயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக தானே-மும்பை புறநகர் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓடும் ரெயிலில் தவறி விழுந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து நீத விசாரணை நடத்த வேண்டும் என்று தானே தொகுதி சிவசேனா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News