இந்தியா

பணமோசடி வழக்கு: "Jaypee" குழுமத்தின் இயக்குனர் மனோஜ் கவுர் கைது- அமலாக்கத்துறை அதிரடி

Published On 2025-11-13 11:25 IST   |   Update On 2025-11-13 11:25:00 IST
  • ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது.
  • மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

பிரபல ஜேபி குழு (Jaypee Group) நிர்வாக இயக்குனர் மனோஜ் கவுர், ஜேபி இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில், மனோஜ் கவுர் இன்று அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது, அதன் பிறகு பல சட்ட சிக்கல்களை ஜேபி நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

மேலும், மனோஜ் கவர் பலரிடம் வீடு வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு வீடு வழங்காமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி, இந்த கைது நடவடிக்கை ஜேபி நிறுவனத்தின் நிதி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்பட மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

இதில், சுமார் ரூ.1.70 கோடி பணம், ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆணவங்கள் உள்ளிட்டவையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், நீண்டகாலமாக நடந்து வரும் ஜேபி குழுமத்தின் நிதி மோசடி விசாரணையின் கீழ், மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News