இந்தியா
தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
- ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது .
- மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார்
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.