வர்த்தக ஒப்பந்தம் முடக்கம்: அமெரிக்க மந்திரி கருத்துக்கு இந்தியா மறுப்பு
- ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
- கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒப்பந்தத்திற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் எனக்கூறினோம். ஆனால் இந்தியா அதற்கு தயக்கம் காட்டியது. இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம் என தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளரான ரன்தீர் ஜெய்ஸ்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக பலமுறை பேசி உள்ளது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர். இதில், வர்த்தக ஒப்பந்தமும் உள்ளடங்கும். எனவே, வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக மோடி பேசவில்லை என்பது தவறானது என தெரிவித்தார்.