இந்தியா

பிரதமர் மோடி மவுன சாமியார் ஆகிவிடுவது ஏன்?: காங்கிரஸ் தாக்கு

Published On 2025-10-19 00:29 IST   |   Update On 2025-10-19 00:29:00 IST
  • ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
  • பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?

பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News