இந்தியா
பஞ்சாப் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 தொழிலாளர்கள் பலி - 29 பேர் படுகாயம்
- வெடிவிபத்தில் தொழிற்சாலை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
- விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் விபத்தில் 5 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்தனர்.
அதிகாலை 1:00 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிற்சாலை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. தீப்பற்றி பற்றி எரிந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே காயமடைந்தவர்கள் காயமடைந்தவர்கள் பதிண்டா மற்றும் முக்த்சரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.