இந்தியா

மெய்தி மக்களுக்கு மிரட்டல் விடுத்த குகி மாணவர் அமைப்பு தலைவர் மீது வழக்குப்பதிவு: கைது செய்ய போலீசார் தீவிரம்

Published On 2025-05-17 18:59 IST   |   Update On 2025-05-17 18:59:00 IST
  • மெய்தி சமூகத்தினர் தொடர்பான விழா வருகிற 20ஆம் தொடங்குகிறது.
  • குகி சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்களை கடந்து மெய்தி சமூகத்தினர் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவ்டத்தில் 5ஆவது மாநில அளவிலான ஷிருய் லில்லி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் மெய்தி சமூகத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என டெல்லி குகி மாணவர்கள் அமைப்பு தலைவர் பயோஜாகுப் கைதே மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முடிந்தவரை அவரை உடனடியாக கைது செய்யும்படி அருகில் உள்ள மாநிலங்களான மிசோரம், அசாம், நாகாலந்து, மேகாலயா மாநிலங்களுக்கு மணிப்பூர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஷிருய் விழாவில் மக்கள் கலந்து கொள்ள போதுமான பாதுகாப்பை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

"மெய்தி தங்குல் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ஷிருய் விழாவை நடத்த உள்ளனர். விழாவிற்கு வரும் எந்த மெய்தியும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உயிருடன் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது" என பயோஜாகுப் கைதே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஷிருய் விழா வருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேவை வரை நடைபெற இருக்கிறது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி- குகி சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News