இந்தியா

அடேங்கப்பா! எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... ரெயில் கழிப்பறையை படுக்கையறையாக மாற்றிய நபர்- வீடியோ வைரல்

Published On 2025-10-25 11:55 IST   |   Update On 2025-10-25 11:55:00 IST
  • தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
  • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.

விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.



Tags:    

Similar News