இந்தியா

மூன்று மனைவிகள், 9 குழந்தைகளுக்காக திருடனாக மாறிய நபர்..!

Published On 2025-05-29 17:51 IST   |   Update On 2025-05-29 17:51:00 IST
  • போலீசார் 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
  • மூன்று மனைவிகளும் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒருவர் தொழில்முறை திருடனாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பொலீஸ் நிலையத்தில் ஏராளமான கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் பபாஜான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பபாஜானை கைது செய்ததன் மூலம் 8 திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகவும், அவர்கள் பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று மனைவிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் மூலம் 9 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்காக தொழில்முறை திருடனாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை பராமரிக்க தொழில்முறை திருடனாக ஒருவர் மாறியது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News