இந்தியா
ஜனநாயக கடமை.. மகாராஷ்டிரா தேர்தலில் வாக்களித்த 113 வயது பெண்மணி
- மகாராஷ்டிராவில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகளும் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், 113 வயதான கஞ்சன்பென் பாட்ஷா என்ற பெண்மணி இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாக்குப் பதிவு மையத்திற்கு வீல்சேரில் வந்த கஞ்சன்பென் பாட்ஷா உற்சாகத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.