இந்தியா
VIDEO: நெடுஞ்சாலையை கம்பீரமாக கடந்து சென்ற சிங்கம் - காத்திருந்த வாகன ஓட்டிகள்
- குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன.
- சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.
குஜராத் மாவட்டம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் இன்று சிங்கம் சாலையை கடந்து சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிங்கம் சாலையை கம்பீரமாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியை தாண்டும் சிங்கங்கள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.