இந்தியா

VIDEO: உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை எம்.பி. பார்வையிட்டு கொண்டிருந்த போது பயங்கர நிலச்சரிவு

Published On 2025-09-18 11:10 IST   |   Update On 2025-09-18 11:10:00 IST
  • உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்
  • இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.

இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.

டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் , "இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் மோசமானம காயங்களை ஏற்படுத்தியுள்ளன, அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கும். நேற்று மாலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பயங்கரமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

இந்த பேரிடர் நேரத்தில், சவாலான சூழ்நிலைகளிலும் கூட சாலைகளில் இருந்து குப்பைகளை அகற்றும் அனைத்து அதிகாரிகள், NDRF-SDRF பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News