இந்தியா

கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு

Published On 2025-04-30 07:49 IST   |   Update On 2025-04-30 07:49:00 IST
  • தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
  • தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில, இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Tags:    

Similar News