null
வெடிகுண்டு மிரட்டல்- நாக்பூரில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
- மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
- விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் போலியானது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டது. இதேப்போல், டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொச்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருகிறது.
நேர விரயம் தவிர்க்கப்படும் என்பதால் தொழிலதிபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என பலராலும் விமான பயணம் விரும்பப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் ஒருபுறம் இருக்க, அகமதாபாத் விமான விபத்து போன்ற காரணங்களால் விமானத்தில் பயணிகள் ஒருவித பயத்திலேயே பயணிப்பதாக கூறப்படுகிறது.