இந்தியா
VIDEO: ஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடி கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
- கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
- இந்தாண்டு ஓணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜுனைஸ் வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர். ஜுனைஸ் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.