இந்தியா

ஓட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்-மருமகன் உயிரிழப்பு

Published On 2026-02-18 08:15 IST   |   Update On 2026-02-18 08:15:00 IST
  • கார் டிரைவர் உள்பட 6 பேரும் மீன்குழம்புடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
  • வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 48). நேற்று முன்தினம் இரவு மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி (58), தனது 2 குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு கார் டிரைவர் உள்பட 6 பேரும் மீன்குழம்புடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து 3 பேரும் பாரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாஜி மற்றும் அவரது மாமியார் ரஷீதா பீவி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் சஜினா மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கெட்டுப்போன மீன்குழம்பை சாப்பிட்டதால் அது விஷமாக மாறி 2 பேரின் உயிரை பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News