இந்தியா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published On 2025-07-15 12:49 IST   |   Update On 2025-07-15 12:49:00 IST
  • கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா வீரர்களிடம் மோதல் ஏற்பட்டது
  • இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தனது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2இதனையடுத்து நாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி சார்பாக நலம் விசாரித்து, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News