இந்தியா

ஐ.டி. அனுப்பிய நோட்டீஸ்.. விடுதியில் 'சூட்கேஸ் நிறைய பணம்' - மகாராஷ்டிர அமைச்சரின் வீடியோ வைரல்

Published On 2025-07-11 20:50 IST   |   Update On 2025-07-11 20:50:00 IST
  • 2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது
  • சஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் ஒரு தனியார் அறையில் பணம் நிறைந்த புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கம் நேற்று வருமான வரித் துறை சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வெளியிடப்பட்ட மறுநாளே இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவுரங்காபாத் (மேற்கு) தொகுதி எமில்ஏவும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சருமான சஞ்சய் ஷிர்சாத், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர்.

இந்த வீடியோவை உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

Full View

ஆனால் வீடியோவில் காணப்படும் சூட்கேசில் பணம் இல்லை என்றும், அது துணிகளை வைப்பதற்கான பை என்றும் சஞ்சய் ஷிர்சாத் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

சிலர் வருமான வரித்துறையில் தனக்கு எதிராக புகார் அளித்ததாகவும், இதன் காரணமாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையேசஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.

Tags:    

Similar News