இந்தியா

அமெரிக்க தளபதி பாகிஸ்தான் உறவை பாராட்டியது ராஜதந்திர தோல்வி இல்லையா?: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

Published On 2025-06-11 20:01 IST   |   Update On 2025-06-11 21:29:00 IST
  • பாகிஸ்தான் தற்போது தீவிர பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
  • மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உலகில் ஒரு அற்புதமான பங்காளியாக இருந்து வருகிறது- அமெரிக்க ராணுவ ஜெனரல்.

பாகிஸ்தான் தற்போது தீவிர பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உலகில் ஒரு அற்புதமான பங்காளியாக இருந்து வருகிறது என சென்ட்காம் (CENTCOM) தளபதியான அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் மற்றும் இந்தியா சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணம் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூற எம்.பி.க்கள் அடங்கிய ஏழு குழுக்களை பல்வெறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ ஜெனரல், பாகிஸ்தான் பாராட்டியுள்ளது, இந்தியாவுக்கான ராஜதந்திர (diplomatic) பின்னடைவு இல்லையா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நமது பிரதமரும் அவரது சியர்லீடர்களும் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இது ஒரு ராஜதந்திர பின்னடைவு இல்லையா? என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News