இந்தியா

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்

Published On 2025-08-18 12:43 IST   |   Update On 2025-08-18 12:43:00 IST
  • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
  • இந்தியா கூட்டணி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

அதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாரை தகுதி நீக்கம் செய்ய இம்பீச்மண்ட் மோஷன் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News