இந்தியா

12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் கல்லாக மாறும் அரிய நோய் பாதிப்பு

Published On 2025-12-23 10:46 IST   |   Update On 2025-12-23 10:46:00 IST
  • பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
  • இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி (வயது 12) கடந்த சில ஆண்டுகளாக அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் படிப்படியாக கல் போன்று மாறி வருகிறது. இவருக்கு 4 வயதாக இருந்தபோது இந்த நோயின் அறிகுறிகள் தோன்றின. முதலில் உடலில் செதில்கள் உருவாகின. பின்னர் அது படிப்படியாக மரப்பட்டை போல கடினமாகி பின்னர் கல் போல கடினமாக மாறியது. இந்தப் பிரச்சனை முதலில் கைகளுக்குப் பரவியது.

பின்னர் முழு உடலுக்கும் பரவியது. இந்த நோயின் காரணமாக சிறுமியால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவள் நாளுக்கு நாள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறாள்.

பல மருத்துவமனைகளில் காட்டப்பட்டும் எந்த பலனும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜேஸ்வரிக்கு இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்ற மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது அரிதானது. இந்த நோயால் உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொற்று அல்ல தற்போது நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சரைசர் தடவுவது நோயின் விளைவுகளை ஓரளவு குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News