இந்தியா

இளையராஜா

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் இளையராஜா

Published On 2022-07-25 09:55 GMT   |   Update On 2022-07-25 09:56 GMT
  • பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி:

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News