இந்தியா

எனக்கு பாஸ் போடுங்க, இல்லைனா கல்யாணம் பண்ணிடுவாங்க: வைரலாகும் மாணவியின் விடைத்தாள்

Published On 2024-03-13 12:48 GMT   |   Update On 2024-03-13 12:48 GMT
  • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
  • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News