இந்தியா

54,760 டன் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2024-02-22 21:39 IST   |   Update On 2024-02-22 21:39:00 IST
  • 50 ஆயிரம் டன் வெங்காயம் வங்காளதேசத்திற்கும், 1200 டன் வெங்காயம் மொரீசியஸ்க்கும், 3000 டன் பஹ்ரைனுக்கும் ஏற்றுமதி.
  • மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் தடையை நீக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31-ந்தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீசியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

50 ஆயிரம் டன் வெங்காயம் வங்காளதேசத்திற்கும், 1200 டன் வெங்காயம் மொரீசியஸ்க்கும், 3000 டன் பஹ்ரைனுக்கும், 560 டன் பூடானுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளோம் என நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் வர்த்தகத்தால் மார்ச் 31-ந்தேதி வரை ஏற்றுமதி செய்யப்படும். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டுகோள் விடுக்கின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வளவு வழங்க வேண்டும் என மதிப்பிடுகிறது. அமைச்சர்கள் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

உள்நாட்டு வெங்காயம் வினியோகம் சீராக இருக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையிலும், மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் தடையை நீக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ரபி (குளிர்காலம்) வெங்காய உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகராஷ்டிராவில் குறைவான நிலப்பரப்பில்தான் பயிர் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு காரணமாக எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News