இந்தியா

காதலே, காதலே, தனிப்பெருந்துணையே... முதியோர் காப்பகத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி

Published On 2025-07-12 13:12 IST   |   Update On 2025-07-12 13:12:00 IST
  • முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
  • கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

கேரளாவில் அரசு நடத்தும் முதியோர் நல காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலரவே. கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களின் திருமணக் கனவும் நிறைவேறியது

கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து, நகர மேயர் எம்.கே. வர்கீஸ் முன்னிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

Tags:    

Similar News